முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சல்லில் நிலச்சரி - 7 பேர் பலி

சனிக்கிழமை, 31 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

காமெங் : அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஏழு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள பனா–செப்பா சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேர் பலியாகினர். பலியானவர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு மீட்புக் குழுவினரால் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன.

நிலச்சரிவில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அருணாச்சலப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மாமா நட்டுங் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து