முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட்டில் ஆடப்போவது யார்? - ஷர்துல் - நிதிஷ் இடையே கடும் போட்டி

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      விளையாட்டு
INDIA-1 2024-10-23

Source: provided

பெக்கேன்ஹாம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இங்கிலாந்து பிட்ச்...

ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை வீசினார். முக்கிய விக்கெட்டுகள் ஒன்றிரண்டை வீழ்த்தினார். ஆனால், இங்கிலாந்து பிட்ச், நிலைமைகள் ஆஸ்திரேலியா போல் அல்ல. இங்கிலாந்தில் பந்துகள் குறிப்பாக டியூக் பந்துகள் மேகமூட்டமான வானிலையில் நன்றாக ஸ்விங் ஆகும் தன்மை கொண்டது. இங்கு நிதிஷ் குமாரின் பேட்டிங் நல்ல தடுப்பாட்ட உத்தி இருந்தால் தான் எடுபடும். ஆஸ்திரேலியாவில் பந்துகள் பேட்டிற்கு நன்றாக வரும் ஸ்ட்ரோக் ப்ளே சாத்தியம். ஆனால், இங்கிலாந்தில் கொஞ்சம் பொறுமையுடன் கூடிய தடுப்பாட்டத்திற்குப் பிறகே அவர் பாணி ஆக்ரோஷ பேட்டிங் சாத்தியம்.

அனுபவம்...

மேலும், நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் ஆல்ரவுண்டர் தான். ஆனால், ஷர்துல் தாக்கூர் பவுலிங் ஆல்ரவுண்டர். கடந்த இங்கிலாந்து தொடரில் ஷர்துல் தாக்கூரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை பவுலிங்கில் செய்தார் என்று கூற முடியாது. ஆனால், அனுபவ மட்டத்தில் ஷர்துல் ஆடிய மொத்த 11 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆட்டங்கள் இங்கிலாந்தில் ஆடியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் அடங்கும்.

சோபிக்கவில்லை...

ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் திருப்திகரமான பங்களிப்பைச் செய்யக்கூடியவர். அவரது இங்கிலாந்தின் சிறு அனுபவம் ஷர்துல் தாக்கூர்தான் அங்கு ஆட வேண்டியவர் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் கேப்டன் ஷுப்மன் கில்லையும் சிந்திக்க வைக்கலாம். மாறாக நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டிகளில் பந்து வீச்சில் சோபிக்கவில்லை.  

முன்னிலை...

கடந்த ஆட்டங்களைப் பார்க்கும் போது ஷர்துல் தாக்கூரும் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது என்பதும் உண்மையே. ஆனால், இவர் பக்கம் அனுபவம் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 7 விக்கெட்டுகளை கிட்டத்தட்ட இதே போன்ற கண்டிஷனில் எடுத்ததும் ஷர்துல் பக்கம் சாதகங்களை கூட்டுகிறது. ஒரு 5-வது பவுலராக ஒருவரிடம் எதிர்பார்ப்பது டைட் ஆக வீசி ரன்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் பேட்டிங்கில் இறங்கி பயனுள்ள வகையில் ரன்களை எடுப்பது என்பதே. இதில் இப்போதைக்கு ஷர்துல் தாக்கூர்தான் முன்னிலையில் இருப்பதாக வல்லுநர்கள் பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து