முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருப்பதி : திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனம் நேரம் 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாள்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று காலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வாரவிடுமுறையை ஒட்டி பக்தர்கள் நேற்று மாலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. இதனால் இலவச தரிசனத்தில் 24 மணி காத்திருந்து வழிபாடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அமைதியான சேவை வழங்க தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் சில மோசடி நபர்கள், தரிசனம் செய்யவும், தங்குமிடத்தையும் ஏற்படுத்தித் தருவதாக மோசடியில் ஈடுபடுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பக்தர்களை ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து