Idhayam Matrimony

ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      உலகம்
Iran 2025-06-16

தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின.

இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையின்படி, ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் அமின் பௌர் ஜோட்கி. புரட்சிகர காவல்படையின் இரண்டாவது யூ.ஏ.வி. ட்ரோன் படைப்பிரிவின் கமாண்ட் தளபதியாக அவர் பதவி வகித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய ஒன்பது நாட்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 7-வது உயர்மட்ட ஈரானிய தளபதி இவர் ஆவார்.

ஈரானின் ட்ரோன்கள், இந்த மோதலில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. அவை இஸ்ரேலின் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளன. ஈரானின் ட்ரோன்களை கண்டறிந்து, கண்காணிக்கவும் மற்றும் வீழ்த்துவதற்கும் நிறைய ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. தற்போது இரு தரப்பிலும் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் தளபதி ஒருவர் கொல்லப்பட்டது, அந்த நாட்டுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து