முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      விளையாட்டு
25-Ram-93

Source: provided

சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி...

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில்  237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 

முதல் வெற்றி...

இந்த தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் தலைமையில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில், “நாங்கள் கிட்டத்தட்ட சரியான ஆட்டத்தையே விளையாடினோம். ஹர்ஷித் மிடில் ஓவர்களில் வேகமாக பந்து வீசி வருகிறார். அவர்கள் இருவரும் (ரோகித் மற்றும் கோலி) பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து