முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீன்லாந்தை எடுத்து கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      உலகம்
Tenmark-PM-Mehta-Fredrickso

வாஷிங்டன், டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்றும் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும்  டென்மார்க் பிரதமர் மேத்தே பிரெட்ரிக்சன் கூறியுள்ளார்.

வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் சரமாரியாக தாக்குதல் நடத்தின. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில், அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன. இந்நிலையில், வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. அதிபருக்குரிய கடமைகள், அதிகாரங்கள் அவருக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது.

இந்நிலையில், ட்ரம்ப்புக்கு மிகவும் நெருக்கமான, ஸ்டீபன் மில்லர் என்பவரின் மனைவி காதே மில்லர், சமூக ஊடகத்தில் கிரீன்லாந்து வரைபடத்தை அமெரிக்க கொடியுடன் வெளியிட்டு, அடுத்து விரைவில் எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக டென்மார்க் பிரதமர் கேத்தே பிரெட்ரிக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவிடம் நேரடியாக சொல்லிக் கொள்கிறேன். கிரீன்லாந்து உடன் இணைந்து டென்மார்க் நேட்டோவில் உறுப்பு நாடாக உள்ளது. அந்த அமைப்பின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்றுள்ளது. கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்த வேண்டும்;

எனவே வரலாற்று ரீதியாக நெருங்கிய நட்புநாடான ஒரு நாட்டிற்கும், தங்களை விலைபேச முடியாது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ள மற்றொரு நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு அமெரிக்காவை நான் வலியுறுத்துகிறேன். டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடிரிக்சன் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்துள்ள நிலையில் டென்மார்க் பிரதமர் கருத்து தெரிவித்துள்ள குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து