முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது அரசு மீது விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்ட தயங்கமாட்டேன்: முதல்வர் ரேவந்த் பேச்சால் சர்ச்சை

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026      இந்தியா
Revanth-Reddy 2023-12-05

ஐதராபாத், தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதல்வர்  ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி,  "தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார். 

தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர்  கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பாராளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து