எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி
தமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி
"தமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் ஒரு இயக்குனர் கௌதம் மேனன்" என்கிறார் கேரள அழகி அர்ச்சனா ரவி
கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டுக்கு வந்து திரை உலகில் கோலோச்சும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே தான் வருகிறது. நயன்தாராவில் ஆரம்பித்து தற்போது மலர்ந்து வரும் கதாநாயகிகளான மஞ்சிமா மோகன், மடோனா செபாஸ்டியன் வரை பெரும்பாலானோர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகி வருகிறார் மிஸ் குயின் (கேரளா) பட்டம் பெற்ற அர்ச்சனா ரவி. 19 வயதான அர்ச்சனா ரவிக்கு கலகலவென பேசுவதும், நடனமும் தான் மிகவும் பிடித்தமான செயல்கள். "எனக்கு பேசுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதன் காரணமாகவோ என்னவோ, நான் எனது பள்ளி பருவத்திலேயே தொகுப்பாளராக உருவெடுத்துவிட்டேன். அதன் பின் மாடலிங் துறையில் நுழைந்து தற்போது சில விளம்பர படங்களில் நடித்து வருகிறேன். இந்த மாடலிங் துறையில் ஒவ்வொரு நாளும் புதுபுது அனுபவங்களை நான் கற்று கொண்டு வருகிறேன்" என்று கூறி மெல்லிய புன்னகையுடன் துவங்குகிறார் அர்ச்சனா.
இவ்வளவு இளம் வயதிலேயே மிஸ் குயின் (கேரளா) என்னும் பட்டத்தை தட்டி சென்ற பெருமை அர்ச்சனாவையே சாரும். அதுமட்டுமின்றி தென் இந்தியாவிற்கான அழகி போட்டியிலும், சிறந்த அழகிய முகத்திற்கான போட்டியிலும், சிறந்த உடல் அழகி மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான மிஸ் பெர்சனாலட்டி போட்டியிலும் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் அர்ச்சனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல விருதுகளை தனது சொத்துக்களாக வாங்கி குவித்துள்ள அர்ச்சனாவை பொறுத்தவரை நடிப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். "நடிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை நான் எங்கும் சென்றும் பயிலவில்லை. மாறாக என் மீது முழு நம்பிக்கை வைத்து தான் கேமரா முன் தோன்றுவேன். நடிப்பு மட்டும் தான் என்னுடைய மிக பெரிய கனவாக பல காலமாக இருந்து வருகிறது. எனக்கு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், சரியான கதை களத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று நம்பிகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. ஜெர்மனியிலும், சீனாவிலும் நடைப்பெற உள்ள நம்பர் 1 மாடல் போட்டிக்கு அர்ச்சனா தயாராகி வருவது மேலும் சிறப்பு.
பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று உள்ள அர்ச்சனாவிற்கு, இயக்குனர் கௌதம் மேனனின் திரைப்படங்கள் மீது தனி மரியாதை உண்டு. "தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனர், காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் கௌதம் மேனன் தான். காதலை மையமாக கொண்டு அவர் உருவாக்கியுள்ள படங்கள் யாவும் மிக எதார்த்தமாகவும், நெஞ்சை உரசி செல்ல கூடியதாகவும் இருக்கும்" என்கிறார் அர்ச்சனா. அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷின் நடிப்பு நுணுக்கங்கள் அவரை பல தருணங்களில் ஆச்சரியப்பட செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் என கலைக்கே புது அர்த்தத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரின் சில காட்சிகளை பார்த்து தான் நான் என்னுடைய நடிக்கும் திறனை வளர்த்து வருகிறேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. "எந்த ஒரு கதாப்பாத்திரமாய் இருந்தாலும் சரி. திரைப்படம் முடிந்து ரசிகர்கள் வீட்டுக்கு சென்றாலும் அந்த கதாப்பாத்திரமானது அவர்களின் நினைவில் இருந்து அழியக் கூடாது. அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதை தவிர நாட்டியம் ஆடும் பெண்மணியாகவும், காதல் கதைகளில் மனதை வருடிச் செல்லும் கதாப்பாத்திரமாகவும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு வேடங்கள்." என்கிறார் அர்ச்சனா.
தனது அம்மாவை முன்மாதிரியாக கருதும் அர்ச்சனா கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நான் தடுமாறி கீழே விழும்பொழுது, என்னை தாங்கி பிடிக்கும் என் அம்மா தான் எனக்கு பெஸ்ட்" என்று கூறி விடை பெறுகிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த அர்ச்சனா ரவி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
15 Oct 2025நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய
-
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது
15 Oct 2025விர்ஜீனியா : உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
என்னை தொடர்பு கொள்ளவில்லை: அஜித் அகார்கர் மீது ஷமி விமர்சனம்
15 Oct 2025மும்பை : இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தான் இடம்பெறாத குறித்து தெரிவித்துள்ள முகமது ஷமி தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர்
-
மீண்டும் அமெரிக்காவுக்கு தபால் பார்சல் சேவை
15 Oct 2025புதுடெல்லி : இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்கியுள்ளது.
-
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் : 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்
15 Oct 2025இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றத்தால் 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
பாகிஸ்தான் அணி வெற்றி
15 Oct 2025தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்..!
16 Oct 2025சென்னை, தமிழக சட்டசபையில் கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
மீண்டும் மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி
16 Oct 2025சென்னை, உடல் நல குறைவுகாரணமாக நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.