முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் சினிமா காட்சிகள் - சூட்டிங் ரத்து

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.23 -சினிமாத் துறைக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்தியா முழுவதும் இன்று சினிமா சூட்டிங் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. திரையுலகிற்கு மத்திய அரசு 30 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று சினிமா காட்சிகள் மற்றும் சூட்டிங் ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஸ்டூடியோ, தியேட்டர்கள் ஒரு நாள் ஸ்தம்பிக்கிறது. இது பற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே. லப்பா கூறுகையில், 

சினிமாவுக்கு ஏற்கனவே கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு வரி விதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே சேவை வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி இன்று இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகிறது. ஸ்டூடியோக்களும் மூடப்படுவதுடன் அனைத்து சூட்டிங்குகளும் ரத்து செய்யப்படுகிறது. சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இன்று ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது என்றார். 

இது குறித்து ஆலோசனை செய்ய தமிழ்த் திரையுலகினர் பங்கேற்ற கூட்டம் நேற்று பிலிம்சேம்பரில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பெப்சி செயலாளர் சிவா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், இந்திய திரைப்பட சங்க துணை தலைவர் சுரேஷ், இயக்குனர் சங்க செயலாளர் அமீர், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

பின்னர் அவர்கள் கூறுகையில், திரையுலகம் ஏற்கனவே பல்வேறு சுமைகள் காரணமாக நலிந்திருக்கிறது. சேவை வரி விதிப்பால் மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இந்தியா முழுவதும் இன்று நடக்கவுள்ள திரையுலக போராட்டத்தில் தமிழ்த் திரையுலகம் சார்பாக அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும். அதன்படி சினிமா படப்பிடிப்பு, தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும். சேவை வரியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சென்னை பிலிம்சேம்பரில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த கூட்டம் நடக்கும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்