முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருவர் ஒரு கேஸ் இணைப்புதான் பெறமுடியும்: ஐகோர்ட்டு தீர்ப்பு

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 7 - ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகள் இருந்தாலும்கூட அவர் ஒரேயொரு சமையல் கேஸ் இணைப்பை மட்டுமே பெற உரிமையுண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆர்.முத்துகிருஷ்ணன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது வீட்டின் எரிவாயு விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து எரிவாயு விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த மனுமீது நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மனுதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்திருந்ததால் சமையல் கேஸ் விநியோகத்தை நிறுத்தியதாக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனக்கு சென்னையில் ஒருவீடும், நாகப்பட்டினத்தில் ஒரு வீடும் உள்ளது என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமையல் கேஸ் இணைப்புகளை வைத்திருப்பதில் தவறில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஒரு சமையல் எரிவாயு இணைப்புதான் வழங்க முடியும் என்று சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு வெவ்வேறு இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருந்தாலும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஒரேயொரு சமையல் கேஸ் இணைப்பை மட்டுமே அவர் பெற முடியும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்