ஒலிம்பிக் குத்துச்சண்டை: விஜேந்தர் சிங் அதிர்ச்சி தோல்வி

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 8 - லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் கால் இறுதியில் இந்தியாவின் முன்னணி வீர ரான விஜேந்தர் சிங் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார் பில் 6 வீரர்களும், மேரிகாம் என்ற ஒரே ஒரு வீராங்கனையும் பங்கேற்றனர். 

இதில் விஜேந்தர் சிங் (மிடில் வெயிட் பிரிவு), தேவேந்திர சிங( ( லைட் பிளை வெயிட்),மேரிகாம் ( பிளை வெயி ட்), ஆகிய 3 பேர் மட்டுமே கால் இறு திக்குள் நுழைந்து இருந்தனர். இந்த 3 பேரும் அரை இறுதியில் நுழைந்தால் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைக்கும். 

அதற்கு ஏற்றவாறு மேரிகாம் கால் இறு தியில், துனிசியா வீராங்கனையை வீழ் த்தி அரை இறுதிக்குள் நுழைந்து பதக்க த்தை உறுதி செய்துள்ளார். 

இதன் மூலம் இந்தியாவுக்கு 4 - வது பத க்கம் கிடைக்கிறது. ஏற்கனவே துப் பாக்கி சுடுதலில் விஜய்குமார் வெள்ளி ப் பதக்கமும், ககன் நரங் வெண்கலப் பதக்கமும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெக்வால் வெண்கலப்பதக்க மும் பெற்றனர். 

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் லண்ட ன் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனா ல் நள்ளிரவிள் நடைபெற்ற காலிறுதி யில் அவர் அதிர்ச்சிகரமாக தோற்றார். 

இந்திய வீரர் விஜேந்தர் சிங் காலிறுதி யில் உஸ்பெக்கிஸ்தான் வீரர் அப்பாஸ் அதோவை எதிர்கொண்டார். இதில் விஜேந்தர் சிங் 13 - 17 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார். 

விஜேந்தர் சிங்கின் இந்த அதிர்ச்சித் தோல்வியால் இந்தியாவின் 5-வது பத க்க வாய்ப்பு நழுவியது. மீண்டும் பதக் கம் வென்று புதிய வரலாறு படைக்க வேண்டும் என்ற அவரது கனவு நனவாகவில்லை. 

மற்றொரு இந்திய வீரரான தேவேந்திர சிங் மோதும் கால் இறுதி ஆட்டம் இன் று நடக்கிறது. அவர் கால் இறுதியில் அயர்லாந்து வீரர் பர்னசை எதிர்கொள் கிறார். இந்திய நேரப்படி இரவு 1.15 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: