அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டி ரோஜர்பெடரர், ஆன்டிமுர்ரே 2 -வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க், ஆக. - 29 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் வெற்றி பெற்று அடு த்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த முதல் சுற்றில் சுவிஸ் வீரரான ரோஜர் பெடரர் எளிதான வெற்றி பெற்றார். ஆனால் முர்ரே மிகவும் தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றார். இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான சோம்தேவ் வர்மன் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளி யேறினார். அவர் லண்டன் ஒலிம்பிக்கி லும் முதல் சுற்றில் தோல்வி அடைந் தார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் போட்டி முக்கிய நகரமான நியூயார் க்கில் வெகு விமர்சையாக நடைபெற் று வருகிறது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்த ப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் சுவிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரரும், அமெரிக்க இளம் வீரரும் மோதினர். இதில் உலக நம்பர் - 1 வீரரான பெடரர் எளிதான வெற்றியைப் பெற்றார். அவ ர் இறுதியில் 6 - 3, 6 - 2, 6 - 4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் டொனால் டு யங்கை வீழ்த்தினார். இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவும், ரஷ்ய வீரரான அலெக்சும் மற்றொரு முதல் சுற்றில் மோதி னர். இதில் முர்ரே மிகவும் தடுமாற்றம் அடைந்தார். இறுதியில் முர்ரே 6 -2, 6 -4, 6 - 1 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் பொ கோமொலோவை தோற்கடித்து அடுத் த சுற்றுக்குள் நுழைந்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற முர்ரே 3 -ம் நிலை வீரராவார். இதில் தோல்வி அடைந்த ரஷ்ய வீரர் 73-ம் நிலை வீரராவார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷ்ய முன்ன ணி வீராங்கனையான மரியா ஷரபோ வாவும், ஹங்கேரி வீராங்கனை மெலி ண்டா ஜிங்கும் மோதினர். இதில் அனுபவமிக்க ரஷ்ய வீராங்க னையான மரியா 6 -2, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவினார்.
தவிர, நடப்பு சாம்பியன் சமந்தா ஸ்டோசர், முதல் நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா, கிம் கிளிஜ் டர்ஸ், பெட்ரா கிவிடோவா மற்றும் சீன வீராங்கனை லீனா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
----------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்: