முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா அருகே கோஸ்டாரிகாவில் கடும் நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      உலகம்
Image Unavailable

 

சான்ஜோஸ், அக். 25 - அமெரிக்கா அருகே உள்ள கோஸ்டா ரிகா நாட்டில் கடும் நில நடுக்கம் ஏற்ப ட்டது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். வட அமெரிக்கா கண்டத்தில் அமெரிக் கா அருகே கோஸ்டாரிகா நாடு உள்ள து. நேற்று முன் தினம் இங்கு கடும் நில நடுக்கம்  ஏற்பட்டது. 

இதனால் தலைநகர் சான்ஜோஸ் நகரி லும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கி ன. 

இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அல றி அடித்தபடி தெருக்களில் ஓட்டம் பிடி த்தனர். 

இங்கு 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

குயானா கேஸ்ட் மாகாணத்தில் தெற் கு லைபீரியாவுக்கு தெற்கே 35 மைல் தூரத்தில் பூமிக்கு அடியில் 24. 5 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. 

இதனால் உயிர்சேதமோ பொருட்சேத மோ எதுரும் ஏற்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் 5 -ம் தேதி இப்பகுதி யில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அப்போது ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்