முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச.18 முதல் 25 வரை திருவையாறு 8-ம் ஆண்டு இசைவிழா

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.16 - கர்நாடக சங்கீத கலைஞர்களுள் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய பத்மபூஷன் பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் பெரியவர் சிறியவர் பேதமின்றி, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் பேதமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி திருவையாற்று ஆராதனை விழாவை நம் கண்முன்னே சென்னை காமராஜர் அரங்கில் கொண்டு வர உள்ளார்கள். 

2012 டிசம்பர் 18 முதல் 25 வரை நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க சென்னையில் திருவையாறு இசை விழாவின் துவக்க நாளான டிசம்பர் 18-ம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு திருமெய்ஞானம் சகோதரர்களின் நாதஸ்வரத்துடன் ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு பத்மபூஷன் பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை 300 கலைஞர்கள் இசைத்தும் பாடியும் வழிபடுகின்றனர். 

எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த இசைவிழாவில் டிசம்பர் 18-ம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு திருமெய்ஞானம் சகோதரர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் மாலை 2.30 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனையோடு துவக்க விழாவும், மாலை 4.45 மணிக்கு பத்ம விபூஷன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் சிறப்பு நிகழ்ச்சியுடன் கோலாகலமாக ஆரம்பிக்கிறது. இரவு 7.30 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவனின் வாய்பாட்டுடன் நிறைவடைந்து, முதல் நாள் 4 நிகழ்ச்சிகளோடும், தொடர்ந்து வரும் மற்ற 7 நாட்களில் தினமும் 7 நிகழ்ச்சிகள் காலை 7 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை மிகச்சிறப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நிறைவு நாளான டிசம்பர் 25 மாலை நிறைவு விழாவினையொட்டி மாலை 4.45 மணியளவில் நடைபெறும் அருணா சாய்ராம் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசைய்யா கலந்து கொண்டு கலைஞர்களை கவுரவித்து நிறைவு விழா சிறப்புரையாற்றுகிறார். 

அன்புக்குரிய ரசிகர்களுக்காக  இந்த ஆண்டும் மிகப் பெரிய சைவ உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மனுதுக்குப் பிடித்தமான, சுவையான உணவு வகைகளின் அணிவகுப்பு உங்களை திக்குமுக்காட செய்யும் என்பது உறுதி. உங்களின் செவிகளுக்கு திகட்டத் திகட்ட விருந்து படைக்கும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிகளுக்கு இடையே, வயிற்றுக்கும் சுவையான அமுது படைக்கவே இந்த உணவுத் திருவிழா, செவி குளிர கேளுங்கள், மனம் நிறைய உண்டு மகிழுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!