முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்பில் 2 பைபிள்கள்

சனிக்கிழமை, 12 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜன, - 13 - அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் போது 2 பைபிள்களை பயன்படுத்த இருக்கிறார். அமெரிக்காவின் அதிபராக மீண்டும் வ்ரும் 20-ந் தேதியன்று தமது குடும்பத்தார் பயன்படுத்தும் பைபிளை வைத்து பதவிப் பிரமாணம் ஏற்கிறார். 21-ந் தேதியன்று நடைபெறும் சம்பிரதாயப்படியான பதவியேற்பு நிகழ்சியில் 2 பைபிள்களை ப்யன்படுத்த இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்தியது. மற்றொன்று ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தியது. 2009-ம் ஆண்டு பதவியேற்கும் போது ஆபிரகாம் லிங்கனின் பைபிளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த பைபிள் 1861-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி லிங்கன் பதவியேற்றது முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபிரகாம் லிங்கனின் பைபிளை அமெரிக்க உச்சநீதிமன்ற பணியாளராக இருந்த வில்லியம் தாமஸ் கரோல் என்பவர் வாங்கியிருந்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!