முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து ரயில் விபத்தில் 19 பேர் பலி

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

கெய்ரோ, ஜன. 17 - எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே பயணிகள் ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். எகிப்து பாதுகாப்பு படையை சேர்ந்த 1,328 வீரர்களை ஏற்றிக் கொண்டு 12 பெட்டிகள் கொண்ட இந்த பயணிகள் ரயில் அஸியூத் நகரில் இருந்து வடக்கு திசையில் கெய்ரோ நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் திடீரென கெய்ரோவை நெருங்க இருந்த நிலையில் பத்ரஷீன் பகுதி அருகே ரயிலின் கடைசி இரு பெட்டிகள் கழன்று தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் சடலங்கள் சிதைந்து ஆங்காங்கே சிதறி விழுந்ததாக விபத்தில் உயிர் தப்பிய சக வீரர் ஒருவர் தெரிவித்ததாக அரசுக்கு சொந்தமான அஹ்ரம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்து நடந்த தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் நள்ளிரவு நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை அப்பகுதி மருத்துவமனைகளில் சேர்க்க உதவினர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!