4-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஜன. 24 - இங்கிலாந்து அணிக்கு எதிராக மொ காலியில் நடைபெற்ற 4 - வது ஒரு நா ள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில், ரோகித் சர்மா மற்றும் ரெய்னா இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக விராட் கோக்லி , கேப்ட ன் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவரு க்கு ஆதரவாக அஸ்வின் மற்றும் இஷா ந்த் சர்மா ஆகியோர் பந்து வீசினர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 4 -வது போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெ ட் சங்க அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முன்னதாக டாசி ல் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டி ங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் குக் மற்றும் பெல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இங்கிலாந்து அணி இறுதியில் 50 ஓவரி ல் 7 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 3 வீரர்க ள் அரை சதம் அடித்தனர். 

கேப்டன் குக் 106 பந்தில் 76 ரன் எடுத் தார். இதில் 13 பவுண்டரி அடக்கம். பீட்டர்சன் 93 பந்தில் 76 ரன் எடுத்தார். இதி ல் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் டக்கம். தவிர, ஜோ ரூட் 45 பந்தில் 57 ரன்னையு ம், பட்லர் 14 ரன்னையும், பெல் 10 ரன் னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், ஆல்ரவுண்டர் ஜடேஜா 39 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். தவிர, இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட் எடு த்தனர். 

இந்திய அணி 258 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கி லாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்னை எடுத் தது. 

இதனால் இந்த 4 -வது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போ  ட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. 

இந்திய அணி தரப்பில் துவக்க வீரராக இறங்கிய ரோகித் சர்மா இந்தப் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபாரமாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். 

சர்மா 93 பந்தில் 83 ரன் எடுத்தார். இதி ல் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். சுரேஷ் ரெய்னா 79 பந்தில் 89 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கா மல் இருந்தார். இதில் 9 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். 

தவிர, ஆல்ரவுண்டர் ஜடேஜா 28 பந்தி ல் 21 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, கேப்டன் தோனி 21  பந்தில் 19 ரன்னையும், கோக்லி 33 பந் தில் 26 ரன்னையும், காம்பீர் 10 ரன்னையும், எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் டிரட்வெல் 54 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, பின், பிரஸ்னன் மற்றும் டெர்ன்பேச் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: