பெங்களூரிடம் போராடித் தோற்றது டெல்லி

சனிக்கிழமை, 11 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே.12 - பெங்களூர்  ராயல் சேலஞ்சர்ஸூக்கு எதிரான  ஐபிஎல்  கிரிக்கெட்  போட்டியில்  4 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது டெல்லி டேர்டெவில்ஸ்.  முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில்  4 விக்கெட் இழப்புக்கு  183 ரன்கள் குவித்தது.  பின்னர் ஆடிய டெல்லி   20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு   179 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. டெல்லியில் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற இந்த ஆட்டத்தில்   டெல்லி அணியில்   அதிகாரப்பூர்வ கேப்டன்  ஜெயவர்த்தனா இடம்

பெற்றிருந்த போதும், வார்னர்  தலைமையிலேயே  அந்த அணி களமிறங்கியது. டாஸ் வென்ற   வார்னர்  பீல்டிங்கை  தேர்வு செய்தார். 

கெயில் 4 ரன்கள் : இதையடுத்து  பேட் செய்த  பெங்களூர் அணியில்  கெயில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பதான்  பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து  புஜாராவுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. புஜாரா 17 பந்துகளில்  3 பவுண்டரிகளுடன்  17 ரன்கள்  எடுத்து  ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹென்ரிக்ஸ்  களம் புகுந்தார்.  இந்த ஜோடி  3 ​- வது  விக்கெட்டுக்கு   57 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ்  22 பந்துகளில்  26 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பெங்களூர்  அணி 13.2 ஓவர்களில்  89 ரன்கள் எடுத்திருந்தது. கோலி அதிரடி :  இதையடுத்து 

கேப்டன் கோலியுடன்  ஜோடி சேர்ந்தார் டிவில்லியர்ஸ். மோர்கல்  வீசிய  17​ - வது ஓவரில் இருந்து  அதிரடி தொடங்கியது.  அந்த ஓவரில்  டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை  அடிக்க, கோலி இரு பவுண்டரிகளை  அடித்தார்.  அதில் முதல் பவுண்டரி அடித்தபோது கோலி 44 பந்துகளில் அரை சதம் கடந்தார். உமேஷ் யாதவ் வீசிய  அடுத்த ஓவரில்  டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரை  விளாச, கோலி தன் பங்குக்கு 2 சிக்ஸர்களையும், ஒரு  பவுண்டரியை விரட்டினார்.  இதனால்

பெங்களூரின் ஸ்கோர்  ராக்கெட்  வேகத்தில் உயர்ந்தது. உமேஷ் யாதவ் வீசிய கடைசி  ஓவரை எதிர்கொண்ட  கோலி, அதில்  2 சிக்ஸர்களையும், இரு பவுண்டரிகளையும் விளாசினார்.  இதனால் கோலி சதமடிக்க, கடைசிப் பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 2 ​- வது ரன்னுக்கு ஓடியபோது  கோலி ரன் அவுட்டானார். 

இதனால் அவர் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

பெங்களூர்  அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்  இழப்புக்கு  183 ரன்கள் குவித்தது.  கோலி  58 பந்துகளில்  4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன்  99 ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ்  17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல்  32 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில்  உமேஷ்யாதவ் 4 ஓவர்களில்  65 ரன்களை வாரி  வழங்கி

னார். இதன்மூலம்  இந்த ஐபிஎல் போட்டியில்  60 ரன்களுக்கு மேல் வாரி  வழங்கியவர்கள் வரிசையில் அசோக் திண்டா, இஷாந்த் சர்மா  ஆகியோருடன்   உமேஷ் யாதவும்  இணைந்தார். 

கடைசி 4 ஓவர்களில்  77 ரன்கள் :

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி முதல் 16 ஓவர்களில்  106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  கோலி,  டிவில்லியர்ஸ்  அதிரடியால்  கடைசி 4 ஓவர்களில் மட்டும் பெங்களூருக்கு  77 ரன்கள் கிடைத்தன. 

டெல்லி தோல்வி : பின்னர் ஆடிய  டெல்லி அணியில்  ஜெயவர்த்தனா 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, உன்முக்த் சந்த் களம் புகுந்தார். வினய் குமார் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த  சேவாக் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.  பின்னர் வந்த கேப்டன் வார்னர் 4 ரன்களில்  போல்டு ஆக,உன்முக்த் சந்துடன் இணைந்தார்  பென் ரோஹர். இந்த ஜோடி 4​- வது விக்கெட்டுக்கு  7.2 ஓவர்களில்  58 ரன்கள் சேர்த்தது. ரோஹர் 27 பந்துகளில் 32 ரன்களும், உன்முக்த் சந்த் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தனர். கடைசி 3 ஓவர்களில்  

டெல்லியின் வெற்றிக்கு  51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வினய் குமார்  வீசிய 18 ​- வது  ஓவரில் பதான் ஒரு பவுண்டரியையும், மோர்கல் இரு பவுண்டரிகளையும்  விளாசினர். ராம்பால் வீசிய அடுத்த ஓவரில் பதான் இரு சிக்ஸர்களை  விளாச, கடைசி  ஓவரில்  19 ரன்கள் எடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது. உனட்கட் வீசிய 

அந்த ஓவரின் முதல்  3 பந்துகளில்  இரு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.  கடைசி  2 பந்துகளில்  8 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 5 - வது பந்தில்  மோர்கல் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில்   உமேஷ் யாதவ்  பவுண்டரி அடிக்க,  4 ரன்களில்  தோல்வி கண்டது டெல்லி, பதான் 11 பந்துகளில்  2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 ஓவர்களில்  25 ரன்களை மட்டுமே 

கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயதேவ்  உனட்கட் ஆட்டநாயகன் ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: