முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் சூதாட்டம்: 2 முக்கிய குற்றவாளிகள் கைது

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.25 - கிரிக்கெட் சூதாட்ட தரகர் கும்பலின் தலைவன் உத்தம் ஜெயின் உள்பட 2 பேரை சென்னையில் சிபிசிஐடி போலீசார்  இன்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 100-க்கும் அதிகமான தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளுக்கு  இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலை சேர்ந்த 6 பேரை சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். இந்த கும்பலின் தலைவனான  பிரசாந்த், போலீசில் சரணடைந்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சவுகார்பேட்டையை சேர்ந்த உத்தம்சிங் ஜெயின்  என்பவர்தான் சூதாட்டத்தில் முக்கியமானவர் என தெரியவந்தது. அவர் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த உத்தம்சிங் ஜெயின் (எ) கிட்டியை போலீசார் இன்று காலை மடக்கி பிடித்து கைது  செய்தனர். வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த ஏராளமான சிம்கார்டுகள்,  கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கொடுத்த தகவலின்பேரில் புரசைவாக்கத்தை சேர்ந்த ஜேசுராஜ் ஜெயின் (எ)  ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

போலீசாரிடம் உத்தம்சிங் ஜெயின் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எனக்கு 12 ஆண்டுகளுக்கு  முன்பு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சூதாட்டத்தில் கோடி கோடியாக பணம் கொட்டியது. என்னிடம் 100-க்கும்  அதிகமான தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். கிரிக்கெட் போட்டி நடக்கும்போது அவர்களை  தொடர்பு கொண்டு சூதாட்டத்துக்கு அழைப்பேன். தமிழகத்தை பொருத்தவரை நானும் பிரசாந்தும்தான் முக்கியமானவர்கள். 2  பேருமே கேப்டன்களாக செயல்பட்டோம். எங்களுக்குள் போட்டி ஏற்பட்டது. நாங்கள் போலீசில் சிக்குவதற்கு அதுவும் ஒரு  காரணம்.

இவ்வாறு உத்தம்சிங் கூறியுள்ளார்.

தரகர்களிடம் இருந்து ஏராளமான ஆதாரங்கள்  சிக்கிய விவரம்:-

கிரிக்கெட் சூதாட்ட தரகர்களிடம் இருந்து ஏராளமான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று  செய்தியாளர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கட்ராமன் கூறுகையில், ''கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 2 பேரை  கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்து  வருகிறோம். இந்த வழக்கின் மைய புள்ளியே உத்தம்சிங் ஜெயின்தான். அவரை கைது செய்துள்ளதால் வழக்கு உச்சகட்டத்தை  எட்டியுள்ளது. அவருடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் யார் என்பதுபோன்ற விவரங்களை விசாரித்து வருகிறோம்.  தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், நடிகர், நடிகைகள் தொடர்பு குறித்தும் விசாரிக்க உள்ளோம்''  

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட தரகர்களிடம் இருந்து ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தரகர்கள் கிட்டி, ஜெஸ்ராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், மடிக்கணினி ஆகியவற்றில் இருந்து சுதைாட்டம் பற்றிய பல விஷயங்கள் வெளி வந்துள்ளது. மேலும், சூதாட்டம் பற்றி மேலும் விசாரணை நடத்த தனிப்படையினர் இதர மாநிலங்களுக்கும் விரைந்துள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்