முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்தயம் கட்டுவதை சட்டப்பூர்வமாக்க புட்டியா யோசனை

வெள்ளிக்கிழமை, 24 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை,மே.25 - கிரிக்கெட்டில் ஊழலை தடுக்க பந்தயம் கட்டுவதை சட்டமாக்கலாம் என்று இந்திய கால்பாந்து அணி முன்னாள் கேப்டன் பைசுங் புட்டியா யோசனை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. ஐ.பி.எல்.போட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு விளையாட்டுக்கே மரியாதையே போய்விட்டது. அதனால் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்க பந்தயம் கட்டுவதை சட்டமாக்க வேண்டும் என்று புட்டியா யோசனை கூறியுள்ளார். ஐரோப்பாவில் பந்தயம் கட்டுவது சட்டமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் கிரிக்கெட்டில் நாள்தோறும் ஊழல் வெளியாகிக்கொண்டியிருக்கிற நிலைமையை ஐரோப்பாவில் பார்க்க முடியாது என்று புட்டியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மும்பையில் கால்பாந்து விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் புட்டியா கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். விளையாட்டு வீரர்கள் பணத்திற்கு ஆசைப்படக்கூடாது. பணத்திற்கு ஆசைப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பணத்திற்கு ஆசைப்படுவது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். ஒரு சில விளையாட்டு வீரர்கள் செய்யும் தவறுக்காக விளையாட்டுக்கள் அனைத்தையும் மோசம் என்று கூறிவிட முடியாது. கிரிக்கெட் விளையாட்டும் மோசம் இல்லை. எந்த ஒரு விளையாட்டு வீரரைக்காட்டிலும் கிரிக்கெட் விளையாட்டானது மேலானதாகும். 3 வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை மதிப்பு குறையச்செய்துள்ளது என்றும் புட்டியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்