திருச்சியில் பெண் கத்தியால் குத்திக்கொலை

mani trynews

 

திருச்சி. மே.3 - திருச்சியில் அண்ணன் தம்பி தகராறை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி திருவெறும்nullரில் உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி பங்கஜவள்ளி. தனது வீட்டின் அருகில் வசிப்பவர் உதயகுமார்(55). இவரது தம்பி சுரேஷ்குமார்(40) மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் தனக்கு தானே அடிக்கடி புழம்பிக்கொண்டு இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் தனது அண்ணன் உதயகுமார் வீட்டிற்கு வந்தபோது வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உதயகுமார், சுரேஷ் குமாரை கண்டித்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த சத்தத்தை கேட்ட வீட்டின் அருகில் வசித்த பங்கஜவள்ளி சண்டைபோட்ட இருவர்களிடமும் இதேதொல்லையாக இருக்கிறது, வீட்டில் குடியிருக்க வேண்டுமா வேண்டாமா? என்று உதயகுமாரிடம் கேட்டுள்ளார்.

ஏற்கெனவே தம்பி மீதுள்ள கோபத்தால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற உதயகுமார் வீட்டில் வைத்திருந்த கைத்தியை பங்கஜவள்ளியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த கத்திகுத்தி பட்ட  பங்கஜவள்ளி அங்கேயே பரிதாபமாக மரணமடைந்தார்.

இதுகுறித்து திருவெறும்nullர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பங்க​ஜவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த உதயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ