முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.800 கோடி பிணைய பத்திரங்கள் தமிழக அரசு விற்பனை

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.30 - தமிழக அரசு ரூ.800 கோடி பிணையப் பத்திரங்கள் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. மொத்தம் ரூ.800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையிலுள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூலை.2, 2013 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் ஜூலை.2, 2013 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இத்தகவலை நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்