எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தருமபுரி. ஜூலை 5 - தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய காதல் கலப்புத் திருமணம் செய்த இளவரசன் நேற்று இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் திவ்யா. இவருக்கும், நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இளவரசனை திருமணம் செய்து கொள்ள திவ்யாவின் தந்தை நாகராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து திவ்யாவின் அப்பா நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கூறியதால் இரு சமூகத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் நத்தம் காலனி, நாயக்கன்கொட்டாய், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த நவம்பர் மாதம் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இது சம்மந்தமாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, இதற்கான விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் திவ்யா உடல்நிலை சரியில்லாத தனது தாயாரைப் பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் இளவரசனின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியாததால், திவ்யாவின் தாயார் சென்னை உயர்nullதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனு விசாரணைக்கு வந்த போது, திவ்யா அவரது தாயாருடன் கோர்ட்டில் ஆஜராகி தற்போது
தனது மனநிலை சரியில்லாததாலும், உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை கவனிக்க
வேண்டியிருப்பதாலும் தனது தாயாருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து, அவரது
தாயாருடன் செல்ல nullதிமன்றம் அனுமதி அளித்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டில் ஆஜரான
திவ்யா இளவரசனுடன் சேர்ந்து இனி வாழ விரும்பில்லை எனவும், தனது தாயாருடனே இருக்க
விரும்புவதாகவும் தெரிவித்ததை அடுத்தும், திவ்யாவின் தாயார் ஆள்கொணர்வு மனுவை வாபஸ்
பெற்றுக் கொண்டதை அடுத்தும், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே
தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார். உடலை மீட்ட போலீசார், அங்கு சோதனையிட்ட போது
அவரது பாக்கெட்டில் இருந்து கடிதங்களை மீட்டதாக தெரிகிறது. இது தற்கொலையாக இருக்கலாம்
என்ற கோணத்தில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக இளவரசன்
இறந்தது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |