முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெராயின் விற்பனை: 4 பேருக்கு மரண தண்டனை

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

ஹனாய், ஜூலை. 13 - ஹெராயின் விற்பனை செய்த வழக்கில் வியட்நாமில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நாட்டில் 600 கிராம் மற்றும் அதற்கு அதிகமாக ஹெராயின் கடத்துவதோ அல்லது விற்பதோ மரண தண்டனைக்குரிய குற்றமாகும். வடக்கு வியட்நாமில் 50 கிலோ ஹெராயினை விற்பனை செய்வதற்காக பேரத்தில் ஈடுபட்டதாக சில மாதங்களுக்கு முன்பு 4 பேர் கைது செய்யப்பட்டனர். அங்குள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அவர்கள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மனிதாபிமான அடிப்படையில் இந்த முறை மாற்றப்பட்டு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்காக ஊசியில் பயன்படுத்தப்படும் மருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் மரணத்தை விளைவிக்க கூடிய மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. மருந்து கிடைக்காததால் வியட்நாம் அரசு 2011 ல் இருந்து யாருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றவில்லை. தற்போது 500 க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். எனவே மரண தண்டனையை நிறைவேற்ற அரசு மாற்று வழியை யோசித்து வருகிறது. இந்த தகவல் அரசு சார்பிலான தொழிலாளர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்