முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மஞ்சுளா திடீர் மரணம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.24 - நடிகை மஞ்சுளா விஜயகுமார் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில்  அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறபட்டது.

உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்றுமதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59).

பலதிரை உலகினர் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது இறுதி சடங்கு நடக்கிறது.

ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மஞ்சுளாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மஞ்சுளா விஜயகுமார் 1953 செப்டம்பர் 9ம் தேதி பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றவர்.உன்னிடம் மயங்குகிறேன் என்ற படத்தில் நடித்த போது, உடன் நடித்த நடிகர் விஜயகுமாருடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உண்டு.

 1969ல் சாந்தி நிலையம் திரைப்படத்தில் மஞ்சுளா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.பின்னர் 1971ல் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்தார். அத சான்பின்னர் பல படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்து சாதனை படைத்தார். 80களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ,என்.டி. ராமாராவ் ,ஜெமினி கணேசன்,  ஷோபன்பாபு, கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஷ்ணுவர்த்தன் போன்ற  முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் இவர்.  ஏராளமான நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது உடலுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த், அவரது மனைவி பிரேமலதா, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார், இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார். நடிகை மீனா, நடிகர் ஸ்ரீகாந்த், மற்றும் மற்றும் ஏராளமான திரையுலகினர் மலர் அஞ்சலி செலுத்தி நடிகர் விஜயக்குமாருக்கும் அவரது மகன் அருணுக்கும், மூன்று மகள்களுக்கும் ஆறுதல் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்