ஸ்பெக்ட்ரம் ஊழல் - ராம் ஜெத்மலானி வாதம்

Ram Jethmalani3

புதுடெல்லி,மே.7 - ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முழு சதி செய்தது முன்னாள் தி.மு.க.அமைச்சர் ராசாதான் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.

2 ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் சார்பாக வாதாட பிரபல சட்ட நிபுணரும் வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில் தொலைதொடர்புத்துறை அமைச்சராக ராசா இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த துறை அமைச்சராக இருந்த ராசாதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார். அவர் ஒதுக்கீடு செய்ததில்தான் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு அவர்தான் பொறுப்பு. அதனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசாதான் முழு சதியை செய்துள்ளார் என்றார். ராம் ஜெத்மலானி வாதாடும்போது ஆ.ராசாவும் கோர்ட்டிற்கு வந்திருந்தார். ராசாவை பழிகெடாவாக்குவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியிருந்தார். அது தற்போது உண்மையாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா பழிகடாவாக்கப்படுவார். அதனால் ராசா தொடர்ந்து சிறையில் இருப்பதுதான் அவருக்கு பாதுகாப்பு என்று கூறியுள்ளார். ராசாவின் நெருங்கிய நண்பரும் பினாமியுமான சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ