முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 -ம் இடம் பிடித்த மாணவன் ரெகுநாதன் பேட்டி

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

தேனி,மே.10 - பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த தேனி மாவட்டம் முத்துத்தேவன் பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிக் பள்ளி மாணவன் ரெகுநாதன் ஐ.ஏ.எஸ். படிக்க விருப்பம் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மெட்ரிகுலேசன் பயின்ற மாணவன் ரெகுநாதன் பிளஸ்-டூ தேர்வில் மாநிலத்தில் 1186 மதிப்பெண் பெற்று மூன்றாம்  இடம் பிடித்தார்.அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-196,ஆங்கிலம் -191 ,கணினி அறிவியல் 200,பொருளாதாரம் ,வணிகவியல் -200 ,கணக்கியல் 199,மொத்தம் 1186 பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்திலேயே  முதலிடம் எடுக்க வேண்டும் என லட்சியத்துடன் படித்தேன்.தற்போது மாநிலத்தில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.இந்த வெற்றிக்கு காரணமான எனது பள்ளி முதல்வர் சத்தியதீபா,செயலாளர் ஆனந்தவேல்,இணை செயலாளர் ராதாகிருஷ்ணன்,எனது பள்ளி வகுப்பாசிரியர் மற்றும் நண்பர்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என்னை ஆளாக்கி படிக்க வைத்த என் பெற்றோர்கள் அப்பா நாகேஸ்வரன்,அம்மா அவர்களுக்கு எனது வெற்றியை காணிக்கையாக்குகிறேன். வருகாலத்தில் ஐ.ஏ.எஸ். படித்து இந்த மாவட்டத்தில் ஆட்சியராக வந்து பணிபுரிய ஆசை என தெரிவித்தார்.மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் ரெகுநாதனை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் செல்வநாயகம் உப தலைவர் பாலகிருஷ்ணன் ,செயலாளர் சந்திரசேகர்,பொருளாளர் ஜவகர்,பள்ளி செயலாளர் ஆனந்தவேல்,இணை செயலாளர் ராதாகிருஷ்ணன்,நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ,பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago