முக்கிய செய்திகள்

கர்நாடக சுரங்க கம்பெனியில் சோதனை

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      இந்தியா
Karnatak-Mine

பெல்லாரி, பிப்.23 - கர்நாடக மாநிலம் கொசபேட் என்ற இடத்தில் உள்ள ஒரு சுரங்க கம்பெனியின் வளாகங்களிலும், இரண்டு இரும்பு தாது சரக்கு போக்குவரத்து கம்பெனிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் கொசபேட்டில் வருமான வரி துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகள் நேற்று இந்த சோதனையை நடத்தினர். இந்த சுரங்க கம்பெனிகளின் அதிபர்களின் வீடுகள் மற்றும் பிற அலுவலகங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கம்பெனிகளில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பதை கண்டறியவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: