முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா அவர்களை பிரதமர் ஆக்குவோம்: தமிழ்மகன் உசேன்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.,28 - கன்னியாகுமரி நாடாளுமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அ. தமிடிநமகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவ செல்வராஜன் வரவேற்றார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் அவர்கள் நன்றி கூறினார். 

இக்கூட்டத்தில் தலைமையேற்று தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள்- கல்வியாளர்கள் நிறைந்த மாவட்டம், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முடிவு, தமிழ்நாட்டின் திருப்பு முனையாக மாறும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற சாதனைத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

அரசியல் நோக்கர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்நோக்கும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்ற தொகுதிகள் 40-யையும் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டும் கழக வேட்பாளர், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் சளுரை ஏற்க வேண்டும்.

கழகத் தோழர்கள் இன்று முதல் களப்பணி ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கல், திருத்தல் பணிகளில் தங்களை ்டுபடுத்திக் கொண்டு, மாண்புமிகு அம்மா அவர்களே, கன்னியாகுமரி தொகுதியில் நிற்பதாகக் கருதிக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும். மாலை நேரங்களில் தின்னைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சென்று அடைய வேண்டும். மகளிர் அணியினர் தாடீநுமார்களை அணுகி, நமது திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். கழகத் தோழர்கள் தொகுதியிலுள்ள 1562 வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நமது பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும்.

இதுபோன்ற தேர்தல் வியுகங்களை நாம் அமைத்துக் காட்டுவதன்மூலம் வெற்றிக்கனியைப் பறிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்காக உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆக மாறுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போன்று, அகில இந்தியாவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, மக்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற துணையாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.

மக்களுடைய பிரச்சனைகளுக்கு சுமுகத்தீர்வு கண்டு, மக்கள் நலத் திட்டப்பணிகளில் ஆர்வம் காட்டி, சமூகத் தொண்டு செடீநுவதன்மூலம் மக்களின் நல்ல நம்பிக்கையை நாம் பெற முடியும். அத்தகைய நல்ல பெயரை வாங்குவதற்கு கழகத் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்புறப் பணி ஆற்ற வேண்டுகிறேன்.

நமக்கு இருக்கும் ஒரே குறிக்கோள், நாம் ஏற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்கு, நம் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்வதே நமது கடமை என சூளுரைப்போம்.

இவ்வாறு அ. தமிழ்மகன் உசேன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்