எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,மே.14 - கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரியாக விளங்குகிறார். கட்சியை ஒருங்கிணைத்து வழிகாட்டுவதில் திறமைசாலியாக இருக்கிறார். கேரள மாநிலத்தில் இடதுகம்யூனிஸ்ட் கட்சியில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு ஒரு சிறந்த தலைவராக விளங்கினார். அவருக்கு பின்னர் அந்த மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் கட்சியில் பல தலைவர்கள் உருவானாலும் அவரது இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் கருணாகரனுக்கு பிறகு உம்மன் சாண்டி ஒரு சிறந்த தலைவராக விளங்குகிறார். உம்மன் சாண்டிக்கு தற்போது 67 வயதாகிறது. இவர் கடந்த 40 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு சிறந்த தலைவராக இருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களையும் கூட்டணி கட்சியினர்களையும் அரவணைத்து செல்வதில் திறமைசாலியாகவும் இருக்கிறார். ஏ.கே. அந்தோணியும் கேரள மாநிலத்தில் ஒரு சிறந்த தலைவராக இருந்தார். ஆனால் அவர் மத்திய அமைச்சராகிவிட்டதால் கேரளத்தில் காலியான இடத்தை உம்மன்சாண்டி நிரப்பிவிட்டார். கடந்த 2006-ம் ஆண்டு கேரளத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சியை பிடித்தபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை ஏற்று நடத்தினார். அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் அரவணைத்து சென்றார். அதேசமயத்தில் அகில இந்திய கேரள மாநில காங்கிரஸ் தலைவராக ரமேஷ் சென்னிதாலா பதவி ஏற்று உம்மன் சாண்டிக்கு போட்டியாக வந்தார். ஆனால் பாமாயில் இறக்குமதி ஊழலில் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்பட்சத்தில் உம்மன்சாண்டி முதல்வராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏ.கே. அந்தோணிக்கும் சோனியா காந்தி முக்கியத்துவம் கொடுக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |