முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படை தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, அக். 20 - பாகிஸ்தான் கடந்த 2 மாதமாக இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருவதால் எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது. தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்திய ராணுவத்தின் கவனத்தை சிதற செய்து காஷ்மீர் மாநில எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் மிகப் பெரிய அத்துமீறலில் ஈடுபட்டது. காஷ்மீர் எல்லையில் உள்ள ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி அங்குள்ள பாதுகாப்பு படை முகாம்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். அப்பகுதிக்கு இந்திய ராணுவம் கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளது. காஷ்மீர் எல்லையில் உள்ள கதுவா, சம்பா, ஹீராநகர், பர்காவல் உள்ளிட்ட பல இடங்களில் இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் ஊடுருவல்காரர் ஒருவரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony