முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீஆண்டாள் கோயிலில் 108 போர்வை சாற்றும் வைபவம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 16 - விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பனிக்காலம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை நள்ளிரவு தொடங்கியது. 

இதனையொட்டி ஸ்ரீவடபத்ரசயனர், ஸ்ரீதேவி, பூமா தேவி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீகருடாழ்வார் ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 

பட்டர்கள், கௌசிக புராணம் வாசித்தனர். பின்னர் 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே. ரவிச்சந்திரன், கோயில் ஸ்தானிகர் ரமேஷ் (எ) ரெங்கராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony