முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்யூனிஸ்டு கட்சி 88வது விழா: நல்லக்கண்ணு பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 88_வது ஆண்டு விழாவை முன்னிட்டு அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்று விழா நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான நல்லக் கண்ணு பங்கேற்று கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். விழாவில் நல்லக்கண்ணு பேசியதாவது:_

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1925_ம் ஆண்டு டிசம்பர் 26_ந் தேதி நாக்பூரில் தொடங்கப்பட்டது. அப்போது தமிழகத்தை சேர்ந்த தொழிற்சங்க வாதியான சிங்காரவேலர் தொடக்க விழா உரையாற்றினார்.

அவர் பேசுகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது, சுரண்டலற்ற தேசத்தை உருவாக்குவது, பிறப்பால் வேறுபட்டு இருக்கும் இந்திய சமூகத்தை ஒருங்கிணைக்க வலியுறுத்தினார்.

இந்த கருத்தின் அடிப்படையில் இந்தியா சுதந்திரம் கிடைக்க பலர் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர். தொழிலாளர்களின் உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்டு போராடி உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. 88_ம் ஆண்டு துவக்கத்தில் நம்முன் நிற்கும் பிரச்சினைகள் ஏராளம்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, சுரண்டல் ஜாதி கொடுமை உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து போராடும் நிலையில் உள்ளோம். இந்திய இறையான்மையை பாதுகாக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்கள் அவரிடம் பேட்டி கண்டனர்.

கே:_ அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறி வருகிறார்கள். உங்கள் கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 'சீட்' கிடைக்காவிட்டால் யாருடன் கூட்டணி சேருவீர்கள்?

ப:_ காங்கிரஸ் இந்தியாவை அடகு வைத்து விட்டது. பாரதீய ஜனதா மத கலாசாரத்தை சீர் குலைக்கிறது. எனவே காங்கிரஸ்_பா.ஜனதா இல்லாத கட்சியில் நாங்கள் இடம் பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில துணை செயலாளர் மகேந்திரன், இந்திய மகளிர் சம்மேளன மாநில தலைவர் சுசீலா டாக்டர் ரவீந்திரன் மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்