முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வளர்மதி வழங்கினார்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 3 - சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வளர்மதி மாற்றுத் திறனாளிகளுக்கு நேற்று நலத்திட்ட உதவிகளை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் வழங்கினார்.

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மோட்டார் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் 3 பயானிகளுக்கு ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலும், பட்டம் மற்றும் பட் டயம் பயின்றவர்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சமும், கால் தாங்கிகள் 28 பயனாளிகளுக்கு ரூ. 92 ஆயிரத்து 400 மதிப்பிலும் வழங்கப்பட்டது.

நவீன செயற்கை அவயம் 2 பயனாளிகளுக்கு ரூ. 29 ஆயிரத்து 800 மதிப்பிலும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 20 பய னாளிகளுக்கு ரூ. 77 ஆயிரம் மதிப்பிலும், மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித் தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள் 100 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலும், மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை அனுமதி ஆணைகள் 61 பயனாளிகளுக்கு ரூ. 7 லட் சத்து 32 ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டது.

216 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 23 லட்சத்து 90 ஆயிரத்து 200 திட்ட மதிப்பில் இன்று அமைச்சர் வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அரசு செயலர் சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மணிவாசன், சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜேஸ்மின், கவுன்சிலர்கள் டி.சிவராஜ், சின்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்