முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை- பா.ஜ.க குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே.- 7 - உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பது ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஆர்வும் இல்லை என்பதை காட்டுகிறது என்று பாரதிய ஜனதா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். போலீசார் திடீரென்று ராம்லீலா மைதானத்திற்குள் சென்று ராப்தேவையும் அவரது ஆதரவாளர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டது. இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் தூங்கிக்கொண்டியிருந்தபோது போலீசார் புகுந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பது ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதை காட்டுகிறது என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து பாராளுமன்றத்தை அவசரமாகக்கூட்டி பாப ராம்தேவ் வெளியேற்றப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இந்த சந்திப்புக்கு முன்னர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். போலீசாரின் இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் அபாயம் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாரதிய ஜனதா சார்பாக 24 மணிநேர சத்தியகிரக போராட்டமும் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago