முக்கிய செய்திகள்

பேருந்து விபத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு சரத்குமார் இரங்கல்

Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - வேலூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்ததில் 22 பேர் பலியான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:- நேற்று இரவு வேலூர் அருகே அவலூர் என்ற இடத்தில் பேருந்து விபத்துக்கு உள்ளாகி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைச் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தாராளமாக நிவாரண உதவிகள் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்ட பிறகு வேகக்கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. சமீபத்தில் லாரியின் பின்புறம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அமைச்சர் ஒருவரை இழக்க நேரிட்டது. அதேபோல் நேற்று நடந்த விபத்தும் லாரிக்கு பின்புறம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்கள் விழிப்புடன் ஓட்டினாலே பெரும்பாலான விபத்துக்களைத் தடுக்க முடியும். இதற்குரிய வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டுநர்களிடம் நாம் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் சரக்குமார் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: