முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல! பா.ஜ.க

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூன்.10 - ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தடை செய்ய்ப்பட்ட ஒரு அமைப்பு அல்ல. அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி சிதம்பரத்தின் குற்றச்சாட்டையும் பா.ஜ.க. மறுத்துள்ளது. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு அவரது டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறினார்கள். ஆனாலும் ராம்தேவின் உண்ணாவிரதம் நீடிக்கிறது.

டெல்லியில் அவர் உண்ணாவிரதம் இருந்த போது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக 11 ஆயிரம் பேர் கொண்ட ஒரு இளைஞர் படையை அமைக்கப் போவதாகவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் ராம்தேவ் கூறியிருந்தார். ஆயுத பயிற்சி உட்பட பிற பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர்கள் இருவரையும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தாக்கிப் பேசியுள்ளார். இவர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமுடிகள் என்று சிதம்பரம் கூறியிருந்தார். இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் தேசிய மேலிட பிரதிநிதி பிரகாஷ் ஜவடேகர், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். இது குறித்து ஜவடேகர் கூறியதாவது, 

தற்காப்பு படையை அமைக்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். ஆனால் எங்கள் கட்சி ஒருபோதும் வன்முறையை ஆதரித்தது இல்லை. அது பற்றி பிரச்சாரம் செய்ததும் இல்லை. வன்முறையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஊழலை எதிர்த்து போராட யார் முன்வந்தாலும் அவர்களுக்கு தார்மீக ஆதரவை பாரதீய ஜனதா அளிக்கும். அன்னா ஹசாரேவும், ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமுடிகள் என்று சிதம்பரம் கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. காங்கிரஸ் கட்சி விரக்தியடைந்து இருக்கிறது. அதனால்தான் ராம்தேவ் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கி சிதம்பரம் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒன்றும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று நான் சவால் விடுகிறேன். ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதித்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்