முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களுக்கு நவீன முறையில் வீடுகள் கட்ட திட்டம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.16 - டெல்லியில் எம்.பி.க்களுக்கு நவீன முறையில் புதிய வீடுகளை கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வீடும் ரூ.55 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. டெல்லியில் வடக்கு அவன்யூ மற்றும் தெற்கு அவன்யூவில் எம்.பி.க்களுக்கு வீடுகள் உள்ளன. வடக்கு அவன்யூவில் 356 எம்.பி.க்களும் தெற்கு அவன்யூவில் 193 எம்.பி.க்களுக்கும் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அதனால் அவைகளை பழுதுபார்த்து பாதுகாப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதார வசதிகள் பற்றாக்குறையாக இருக்கிறது. அதனால் அந்த வீடுகளை இடித்துவிட்டு நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வீடுகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நகர்ப்புற அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 3 அடுக்குமாடிகளை கொண்டதாகவும் டிஜிட்டல் கட்டுப்பாடு கதவுகள் பொருத்தப்பட்டும் இருக்கும். ஒவ்வொரு வீடும் ரூ.55 லட்சம் செலவில் கட்டப்படும். வடக்கு மற்றம் தெற்கு அவன்யூகளில் 414 வீடுகள் கட்டப்படும். புதிய குடியிருப்புகளில் மேலும் 58 எம்.பி.க்கள் தங்கலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony