முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா: சுப்பிரமணிய சுவாமி

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.18 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தொடர்பு உள்ளது என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரையில் தெரிவித்துள்ளார்.   மதுரை கல்லூரியில் நேற்று காலை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி புத்தகத்தை வெளியிட்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. வெளிநாடுகளுக்கு சோனியா 12 முறை ரகசியமாக சென்றுவந்துள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சோனியாகாந்தியும் விரைவில் கைது செய்யப்படுவார்.

   2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம் கைகாட்டிய நிறுவனங்களுக்கு அலை வரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரும் இந்த வழக்கில் சேர்க்கப்படலாம். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony