முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவை அழகுபடுத்தும் பணி அடுத்தமாதம் ஆரம்பம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஜூலை.- 11 - மாநகர் லண்டன் மாதிரி கொல்கத்தாவை அழகுபடுத்தும் பணியை அடுத்தமாதத்தில் இருந்து மேற்குவங்க அரசு தொடங்குகிறது.  இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு அடித்தளமாக இருந்த நகரம் கல்கத்தா. தற்போது இந்த நகரம் கொல்கத்தா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் 4 பெரிய நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்றாகும். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகரமாகும். இந்த நகரை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உலக புகழ் பெற்ற லண்டன் மாநகருக்கு இணையாக அழகுபடுத்துவோம் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொல்கத்தா நகரை அழகுபடுத்தும் பணி அடுத்தமாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளை மாநில அரசு தொடங்கிவிட்டது. முதல் கட்டப்பணியாக ஹூக்ளி நதிக்கரையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அழகுபடுத்தும் பணி தொடங்கப்படும் என்று செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மாநில செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் உயர்மட்டக்கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய், பொதுப்பணித்துறை அமைச்சர் சுப்ரதா பக்ஷி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கொல்கத்தாவை அழகுப்படுத்தும் பணியை தொடங்க முதல்வர் மம்தா அனுமதி அளித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago