முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 -வது டெஸ்ட் போட்டி இந்திய அணி 104 ரன் முன்னிலை தோனி - முகுந்த் அபார பேட்டிங்

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

டொமினிக்கா, ஜூலை. - 11  -  மே.இ.தீவு அணிக்கு எதிராக டொமினிக்காவில் நடைபெற்று வரும் 3 -வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன் எடுத்தது. மொத்த ம் 104 ரன் முன்னிலை பெற்று உள்ளது.  இந்தப் போட்டியில் கேப்டன் தோனி மற்றும் துவக்க வீரர் முகுந்த் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். ரெய்னா, லக்ஷ்மண் மற்று ம் கோக்லி ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிக்கா தீவில் ரொசேயு நக ரில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில், 76.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன் னில் ஆட்டம் இழந்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் அரை சதம் அடி த்தனர்.
கீப்பர் கார்ல்டன் பாக் அதிகபட்சமாக, 79 பந்தில் 60 ரன்னை எடுத்தா ர். டிவைன் பிராவோ 134 பந்தில் 50 ரன்னை எடுத்தார். தவிர, சந்தர் பால் 23 ரன்னையும், கேப்டன் சம்மி 20 ரன்னையும், பரத் 12 ரன்னையு ம் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 77 ரன்னைக் கொடுத்து 5 விக் கெட் எடுத்தார். பிரவீன் குமார் 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஹர்பஜன் சிங் 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தா ர். தவிர, முனாப் படேல் 1 விக்கெட் எடுத்தார்.
பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி 3 -வது நாள் ஆட்ட நேர முடிவில், 98 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்னை எடுத் து இருந்தது. அப்போது கேப்டன் தோனி 65 ரன்னுடனும், ஹர்பஜன் சிங் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
முன்னதாக முகுந்த் 149 பந்தில் 62 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி அடக்கம். இறுதியில் அவர் பிஷூ வீசிய பந்தில் பரத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
மூத்த வீரரான லக்ஷ்மண் 129 பந்தில் 56 ரன்னை எடுத்தார். இதில் 3 பவு ண்டரி அடக்கம். இறுதியில் அவர் சந்தர்பால் வீசிய பந்தில் கீப்பர் பா க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவிர, கோக்லி 53 பந்தில் 30 ரன்னை எடுத்தார்.
சுரேஷ் ரெய்னா, 103 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் எப். எட்வர்ட்ஸ் வீசிய பந்தில் எல்.பி. டபி ள்யு. வாகி வெளியேறினார். கேப்டன் தோனி 109 பந்தில் 69 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம்.
துவக்க வீரர் முகுந்தும், கோக்லியும் இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 98 ரன்னைச் சேர்த்தனர். பின்பு ரெய்னாவும், கேப்டன் தோனியும் இணைந்து 6 -வது விக்கெட்டிற்கு, 103 ரன்னைச் சேர்த்தனர்.
மே.இ.தீவு அணி தரப்பில், கேப்டன் சம்மி 48 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். எட்வர்ட்ஸ் 80 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிஷூ மற்றும் சந்தர்பால் ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்