முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க மாநிலத்தில் 3 நாளில் 26 குழந்தைகள் பலி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பெர்காம்பூர்,ஜூலை.12 - மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 26 குழந்தைகள் இறந்து விட்டன. இது குறித்து பெர்காம்பூர் மாவட்ட சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஷாஜகான் சிராஜ் கூறுகையில், மூச்சு விடுதல் பிரச்சினை, சத்துக்குறைவு, பல்வேறு விநோத நோய்களுடன் பல குழந்தைகள் முர்ஷிதாபாத், பெர்காம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் பெர்காம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 16 குழந்தைகள் இறந்து விட்டன. இதே போல் ஜாங்கிபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் 10 குழந்தைகள் இறந்து விட்டன. சுவாசக் கோளாறு, ஊட்டச் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக குழந்தைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த குழந்தைகள் முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு அந்த குழந்தைகளுக்கு முதலுதவி அளித்து மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டன. இருந்த போதும் 26 குழந்தைகள் இதில் இறந்து விட்டன. மேலும் அதிகளவில் இந்த மாவட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையை சமாளிக்க கொல்கத்தாவில் இருந்து டாக்டர்கள் குழு விரைவில் இங்கு வரவுள்ளது என்றார். 

கொல்கத்தா பி.சி. ராய் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 18 குழந்தைகள் இறந்து விட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பெர்காம்பூர் அரசு மருத்துவமனையில் 26 குழந்தைகள் இறந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்