முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி தெலுங்கானா பிரச்சனையால் ஆந்திர சட்டசபையில் மீண்டும் அமளி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச் - 5 - தனி தெலுங்கானா பிரச்சனையால் நேற்று ஆந்திர மாநில சட்டசபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து 2 வது நாளாக சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ஆந்திர சட்டசபையில் நேற்று முன்தினம் தனி தெலுங்கானா பிரச்சனையை முன்வைத்து தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அன்றைய தினம் சபை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

நேற்று காலை ஆந்திர சட்டசபை கூடியதும், தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்படவே சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு சபைகூடியபோதும் இதே பிரச்சனையை எழுப்பி ராயலசீமா பிராந்தியத்தைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், தெலுங்கு ஜாதி மனாடி என்று முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது குறுக்கிட்டு பேசிய துணை சபாநாயகர் நாடென்தலா மனோகர், தெலுங்குதேசம் கட்சி துணைத் தலைவர் காலி முத்துகிருஷ்ணமா நாயுடு  சபையை சுமூகமாக நடத்துவதற்கு அளித்த உறுதிமொழியை சுட்டிக்காட்டினார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். 

சபை அலுவல்களை நடத்தவேண்டி இருப்பதால் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற வேண்டும் என்று முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் டி.ஸ்ரீதர்பாபு, நிதி அமைச்சர் ஆனாம் ராமனாராயண ரெட்டி மற்றும் அரசு தலைமை கொறடா மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது தனி தெலுங்கானா பிரச்சனையை முன்வைத்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசு அலுவல்கள் நடக்காமல் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago