முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை கலெக்டர் ராகேஷ்சந்திரா கோர்ட்டில் சரண்-நிபந்தனை ஜாமீன்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, ஆக.- 21 - சுனாமி குடியிருப்பு கட்டியதில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக புதுவை கலெக்டர் ராகேஷ்சந்திரா புதுவை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். புதுவையில் கடந்த 2005-ல் சுனாமி வீடுகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போதைய சுனாமி திட்ட அமலாக்க முகமையின் திட்ட இயக்குனரும், புதுவை மாவட்ட கலெக்டருமான ராகேஷ்சந்திராவிடம் சி.பி.ஜ. போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்தனர். இதில் தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கருதிய கலெக்டர் ராகேஷ்சந்திரா புதுவையில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். அப்போது நீதிபதி, 5 நாட்களுக்குள் அவர் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதையடுத்து கலெக்டர் ராகேஷ்சந்திரா நேற்று முன்தினம் மாலை நீதிபதி ராமசாமி முன்னிலையில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
மேலும் சென்னையில் 20-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு தங்கி இருந்து தினமும் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை சி.பி.ஜ. அலுவலகத்தில் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி கலெக்டர் ராகேஷ்சந்திரா நேற்று சென்னையில் உள்ள சி.பி.ஜ.அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
கலெக்டரிடம் சி.பி.ஜ. தொடர்ந்து விசாரணை நடத்துவதால் அவரை நீண்ட விடுப்பில் செல்லும் படி அரசு வலியுறுத்தம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்