முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களிடையே எழுத்தறிவை வளர்க்க வேண்டும்: மீராகுமார்

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.9 - மக்களிடையே எழுத்தறிவை வளர்க்க இன்னும் பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று லோக்சபை சபாநாயகர் மீரா குமார் வேதனைப்பட தெரிவித்துள்ளார். மக்களிடையே அறியாமையை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி அறிவு மிகவும் முக்கியமானது. அறிவு, பண்பாடு, நாகரீக வளர்ச்சிக்கு எழுத்தறிவு அடித்தளமாக விளங்குகிறது. அதனால் இந்திய மக்களுக்கு எழுத்தறிவை புகுட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் இந்தியாவில் எழுத்தறிவு விஷயத்தில் குறிப்பிட்ட இலக்கை இன்னும் எட்ட முடியவில்லை என்று லோக்சபையில் சபாநாயகர் மீரா குமார் நேற்று கூறினார். சர்வதேச எழுத்தறிவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று லோக்சபையில் மீராகுமார் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார். உலகம் முழுவதும் மக்களிடையே எழுத்தறிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மக்களிடயே எழுத்தறிவை வளர்க்க இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஜனத்தொகை கணக்கெடுப்பின்போது நாட்டில் எழுத்தறிவு 74 சதவீதமாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அது அதிக சதவீதமாக இருந்தாலும் மக்கள் அனைவரும் எழுத்தறிவு மேலும் பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். முழு எழுத்தறிவு இன்னும் ஒரு கனவாகவே இருக்கிறது. மேலும் ஆண்கள், பெண்கள் இடையே எழுத்தறிவு சதவீதம் அதிக வித்தியாசத்தில் உள்ளது. நாட்டில் பெண்கள் குறைவாகவே எழுத்தறிவு பெற்றுள்ளனர். அதனால் இந்தியாவில் அனைவரும் எழுத்தறிவு பெற நாம் அனைவரும் அர்ப்பணித்துக்கொள்வோம் என்று மீரா குமார் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!