முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. வில் சீர்திருத்தம் கொண்டு வருவதில் ஜி-4 நாடுகள் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ஐ.நா.செப்.25 - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வந்தே தீரவேண்டும் என்பதில் ஜி 4 நாடுகள் உறுதியாக உள்ளன.  ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 194 நாடுகள் உள்ளன. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா,ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டுமே உள்ளன. இந்த 5 நாடுகளுக்கும் உலகளாவிய அதிகாரம் உள்ளது. ஐ.நா. சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு பாதுகாப்பு சபையில் உள்ள இந்த 5 நாடுகளும் ஒருமித்த ஆதரவு கொடுத்தால்தான் அதை நிறைவேற்ற முடியும். இந்த 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் அதை நிறைவேற்ற முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் குறைந்த அளவு உறுப்பு நாடுகள் இருந்தபோது உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சபையில் இந்த 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர் நாடுகாளக்கப்பட்டன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் 194 உறுப்பினர்கள் இருப்பதால் பாதுகாப்பு சபையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா,பிரேசில்,ஜப்பான், ஜெர்மன் ஆகிய நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. இதற்கு பொதுவான ஆதரவு இருக்கிறது.ஆனால் பாதுகாப்பு சபை விரிவுபடுத்தும்போது இந்த 4 நாடுகளில் எந்த நாட்டை நிரந்தர உறுப்பு நாடாக்குவது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்தியாவுக்கு ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 4 பெரிய வல்லரசு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா மட்டும் மவுனமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் உரையாற்ற வந்துள்ள இந்த ஜி 4 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவந்தே தீர வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்