முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெய்டு நடந்த பொன்முடிக்கு நெருக்கமான 20 இடங்கள்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.- 28 - நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பொன்முடி மற்றும் பொன்முடிக்கு நெருங்கிய உறவினர்களின் இல்லங்களில் ரெய்டு நடத்தினர்.

ரெய்டு நடந்த 20 இடங்களின் விபரம் வருமாறு:- 1. விழுப்புரம்  கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள பொன்முடிக்கு சொந்தமான வீடு.

2. விழுப்புரம் நடேசன் நகரில் உள்ள பொன்முடியின் இளைய சகோதரர் நடனசிகாமணியின் வீடு.

3. விழுப்புரம் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள பொன்முடியின் 2-வது இளைய சகோதரர் டாக்டர் தியாகராஜனின் வீடு .

4. விழுப்புரம் பழைய கோர்ட் சாலையில் உள்ள பொன்முடியின் நெருங்கிய நண்பர் ஏ.மணிவண்னின் இல்லம்.

5. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் மனைவியின் வீடு.

6. கே.கே.நகர் ஆர்.கே.நகரில் உள்ள பொன்முடியின் சம்மந்தி டாக்டர் கே.பாலசுப்பிரமணியத்தின் ஆர்.கே.சண்முகம் அப்பார்ட்மெண்ட்.

7. கே.கே.நகரில் உள்ள பொன்முடியின் சம்மந்தி டாக்டர் கே.பாலசுப்பிரமணியத்தின் கே.எம்.நர்சிங்ஹோம்.

8. அதே கே.கே.நகரில் உள்ள பொன்முடியின் சம்மந்தி டாக்டர் கே.பாலசுப்பிரணியத்தின் கே.எம்.மல்டிஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.

9. சென்னை எழுப்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள பொன்முடியின் நெருங்கிய நண்பர் நசுமீதீனின் வீடு.

10. விழுப்புரம் ஜவஹார்லால் நேரு சாலையில் உள்ள பொன்முடியின் சம்மந்தி டாக்டர் கே.தியாகராஜனின் மரகதம் மருத்துவமனை.

11. விழுப்புரம் காப்பியம் புலியூரில் உள்ள பொன்முடியின் மாமியார் சரஸ்வதி உறுப்பினராக உள்ள சிகா டிரஸ்ட்.

12. கடலூர் சிதம்பரம் சாலை திருப்பாப்புலியூரில் உள்ள பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கு சொந்தமான அலுவலகம்.

13. பாண்டிச்சேரி குயவர்பாளையத்தில் உள்ள பொன்முடியின் இளைய சகோதரர் டாக்டர் ராஜசிகாமணிக்கு சொந்தமான விசாலாட்சி பல்மருத்துவமனை.

14. சென்னை ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொன்முடியின் மனைவி விசாலாட்சி பாகஸ்தாரக உள்ள ``எவர் ஸ்மையில்'' எண்டர்பிரைசஸ் அலுவலகம்.

15. அதே கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கு சொந்தமான விசால் எக்ஸ்போ ஏற்றுமதி நிறுவனம்.

16. அதே கிரீன்வேஸ் சாலையில் ரமணியம் டவரில் உள்ள பொன்முடியின் மூத்த மகன் டாக்டர் கெளதம் சிகாமணிக்கு சொந்தமான ``கயல்பொன்னி அண்டு கோ'' நிறுவனம்.

17. அதே கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொன்முடியின் மகனுக்கு சொந்தமான சூரியா கல்வி அறக்கட்டளை அலுவலகம்.

18. வேப்பேரியில் உள்ள பர்னஸ் இன்டர் நேஷனல் பிரைவேட் லிமிடெட் (வீடியோ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம்-பொன்முடியின் நெருங்கிய நண்பர் நசுமுதீனுக்கு சொந்தமான நிறுவனம்).

19. தி.நகர் பாலாஜி அவென்யூவில் உள்ள பொன்முடியின் சம்மந்தி டாக்டர் கே.பாலசுப்பிரமணியத்தின் வீடு.

20. விழுப்புரம் வழுத்தாரெட்டி கணேஷ் நகரில் உள்ள பொன்முடியின் நெருங்கிய நண்பர் திரிசங்கு என்பவரின் வீடு.

மேற்கண்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்