முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்தை காண இன்று ஷாருக் வருகை

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

மும்பை, அக். 8  - ரஜினிகாந்த் வீட்டுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று நேரில் வந்து நன்றி தெரிவிக்கிறார். இதுகுறித்து ஷாருக்கான் கூறியதாவது, ரஜினி வீட்டுக்கு சென்று அவரை சந்திப்பேன். எனது வேண்டுகோளை ஏற்று ரா ஒன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார். அவரை மும்பைக்கு அழைத்து வந்ததில் இருந்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே எடிட்டிங் செய்து அதை ரஜினியிடம் ஒப்புதல் பெற்று தரும் வரை அவரது மகள் சவுந்தர்யா உதவி செய்தார். சிறு வயதில் இருந்தே ரஜினி, கமல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஹே ராம் படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரா ஒன்னில் ரஜினியுடன் நடித்தேன். நான் சிறுவனாக இருக்கும் போது இவர்கள் இருவரையும் பற்றி எனது அம்மா என்னிடம் நிறைய சொல்வார்கள். அது என் மனதில் நிறைய பதிந்து விட்டது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்