Idhayam Matrimony

திருச்சி மேயர் தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,அக்.22 - திருச்சி மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா,தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் விஜயாஜெயராஜை விட 52 ஆயிரத்து 415 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பாக ஜெயா போட்டியிட்டார். தி.மு.க.சார்பாக விஜயா ஜெயராஜ், ம.தி.மு.க. சார்பாக ரோக்கையா, தே.மு.தி.க. சார்பாக சித்ரா காங்கிரஸ் சார்பாக விஜயா ஆகியோரும் சுயேட்சை சார்பாகவும் மொத்தம் 16 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதல் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா முன்னணியிலேயே இருந்து வந்தார். கடைசியில் அவர் மொத்தம் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 458 ஓட்டுக்கள் பெற்றார். தி.மு.க.வேட்பாளர் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 043 ஓட்டுக்கள் பெற்றார். ஜெயா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் விஜயா ஜெயராஜை விட 52 ஆயிரத்து 415 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று அமோக வெற்றிபெற்றார். ம.தி.மு.க. வேட்பாளர் ரோக்கையா 37 ஆயிரத்து 618 ஓட்டுக்களும் தே.மு.தி.க. வேட்பாளர் சித்ரா 30 ஆயிரத்து 431 ஓட்டுக்களும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயா 15 ஆயிரத்து 387 ஓட்டுக்களும் பெற்று தோல்வியை தழுவினர். பா.ஜ. வேட்பாளர் கிரிஜா வெறும் ஆயிரத்து 314 ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருந்தார். 

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இது 4 கோட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. 12,தி.மு.க.2, தே.மு.தி.க. ஒரு வார்டிலும் வெற்றுபெற்றுள்ளது. பொன்மலை கோட்டத்தில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 8, தி.மு.க.4, ம.தி.மு.க.2,காங்கிரஸ் 1, சுயேட்சை 1 வார்டிலும் வெற்றபெற்றுள்ளது. அரியமங்கலம் கோட்டத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 12, தி.மு.க.5, ம.தி.மு.க.1 வார்டிலும் வெற்றிபெற்றுள்ளது. கோஅபிஷேகபுரம் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.,9 தி.மு.க.5,சுயேட்சை 1 வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன. ஆக திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் அ.தி.மு.க. 42 வார்டுகளிலும் தி.மு.க. 16, ம.தி.மு.க. 3, காங்கிரஸ் 1, சுயேட்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago