முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, நவ.20- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்ததையடுத்து அவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் உடனான பிரச்சனைகளை மம்தா பானர்ஜி முதல்வரானதும் அமைதி பேச்சு நடத்தும் வாய்ப்புகள்  குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாவோயிஸ்ட் தூதர்களுடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையில் மிட்னாபூர் மாவட்டத்தில் திரிணாமுல் தொண்டர் ஒருவரை போலீஸ் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொன்ற பிறகு இருதரப்பு அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் அமைதிப்பேச்சு என்ற அரசின் நிபந்தனையை மாவோயிஸ்டுகள் நிராகரித்தனர். கொலை நடவடிக்கையும், சமாதானப்பேச்சும் கைகோர்த்து போக முடியாது என மம்தா கருத்து தெரிவித்தார். மேலும் மாவோயிஸ்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் மம்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 11 பேரையும் கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்ததையடுத்து மம்தா பானர்ஜிக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த கருப்புபூனை படை பாதுகாப்பை மம்தா ஏற்றுக்கொள்வார் எனத்தெரிகிறது. இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், என்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுபற்றி நான் கவலைப்படவில்லை. என்னை கொல்ல நடக்கும் சதித்திட்டத்தை மக்கள் தடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்